by arul » September 3rd, 2011, 5:35 pm
உயிர்கொடி எரித்தாள்-செந்தமிழ்
தேசத்தை விழிக்க வைத்தாள்
எங்கள் மடி சுடுகிறது-உன்
நினைவுச் சாம்பலிலே
...
வேரடி தகர்ந்த தமிழினமா
பேரிடி சுமந்த உறவுகளா
யாரடி தந்தார் உணர்வலையை
ஏனடி எரித்தாய் உன் உயிர்க் கொடியை
எழுவார் யாரும் இன்றெண்ணியே
ஏற்றினாயோ உடலினில் தீயை
சுடுவார் சுமந்த கூட்டம் தானே
தூக்கிலிட மூவரை துடிக்கிறது
மூவர் உயிர் தடுக்க
உயிர் தந்த தாய்மகளே
எப்போது உன் உணர்வுக்கு
எம்மினம் எழுகிறதோ-அப்போது
இவ்வுலகம் தமிழாழும் தாய்மகளே
முத்துக்குமார் வீசீய சுவாலை
செங்கொடியில் பட்டெரிகிறதே.
ஆவூரான்.